Posts

Showing posts with the label J.Jeyageethangal Vol 16

Aaviyanavare Anbu Nesare | ஆவியானவரே அன்பு \ Lyrics | jebathotta jeyageethangal vol 16

ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் உம் வழிகள் கற்றுத் தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையா 2. கண்ணின்மனி போல காத்தருளும் கழுகு போல சமந்தருளும் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே எந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே புயல்காற்றில் புகலிடமே கடுமழையில் காப்பகமே நான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே சுட்டெரிக்கும் ஆவியானவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் பரிசுத்த ஆவியானவரே 5. வியத்தகு உம் பேரன்பை எனக்கு விளங்கப்பண்ணும் என் இதயம் ஆய்ந்தறியும் புடமிட்டு பரிசோதியும் Tag:  jebathotta jeyageethangal vol 30, jebathotta jeyageethangal vol 31, jebathotta jeyageethangal vol 33, jebathotta jeyageethangal vol 34, jebathotta jeyageethangal vol 5, jebathotta jeyageethangal vol 35, jebathotta jeyageethangal vol 39, jebathotta jeyageethangal all songs, jebathotta jeyageethangal all volumes, jebathotta jeyageethangal anbu kooruven, jebathotta jeyageethangal audio, jebathotta jeyageethangal audio song

Vasathiyai Thedi Odathe – வசதியை தேடி ஓடாதே | Lyrics | jebathotta jeyageethangal vol 16

வதியை தேடி ஓடாதே – அது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷம் சொல்வதற்கு ஆளுகை செய்ய ழே ழே அடிமைப்படுத்த ழே ழே 2. அழகெல்லாம் அற்றுப்போகும் எழில் ஏமாற்றும் கவர்ச்சி எல்லாம் கானல் நீர் கரைந்து போகும் சீக்கிரத்தில் 3. வெட்டுக்கிளி காட்டுத்தேன் உண்டு வந்தார் யோவான் உலகத்தை கலக்கிய மனிதர் அவர் உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் 4. பணமயக்கம் எல்லாவித தீமைகளின் தொடக்கம் சிற்றின்பம் எச்சரிக்கை-உன்னை நடைபிணமாக்கிவிடும் Tag:  jebathotta jeyageethangal vol 30, jebathotta jeyageethangal vol 31, jebathotta jeyageethangal vol 33, jebathotta jeyageethangal vol 34, jebathotta jeyageethangal vol 5, jebathotta jeyageethangal vol 35, jebathotta jeyageethangal vol 39, jebathotta jeyageethangal all songs, jebathotta jeyageethangal all volumes, jebathotta jeyageethangal anbu kooruven, jebathotta jeyageethangal audio, jebathotta jeyageethangal audio songs free download, jebathotta jeyageethangal all audio song download, jebathot

Thallanthu Pona Kaigalai | தளர்ந்து போன | Lyrics | jebathotta jeyageethangal vol 16

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார் விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள் ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி தீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் 3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள் நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும் சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் 4. பார்வைற்றோர் கண்களெல்லாம் பார்வை அடையும் செவிகள் கேட்கும் ஊனமுற்றோர் மான்கள்போல துள்ளிக்குதிப்பர்கள் ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள் 5. வறண்ட நிலம் நீருற்றால் நிறைந்திருக்கும் நதிகள் ஓடும் நரிகள் தங்கும் வளைகள் எங்கும் கோரை முளைக்கும் நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்

Thai Madiyil | தாய்மடியில் தவழுகின்ற | Lyrics | jebathotta jeyageethangal vol 16

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையே கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன் எதைக் குறித்தும் பயமில்லையே என் நேசர் நடத்துகிறீர் 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன் நன்றியோடு துதிக்கிறேன் – நான் கைவிடாத என் ஆயனே கல்வாரி நாயகனே 3. துணையாளரே துணையாளரே இணையில்லா மணவாளரே – என் உணவாக வந்தீரையா உயிரோடு கலந்தீரையா -என் 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன உயிர்வாழும் நாட்களெல்லாம் உம் நாமம் சொல்வேனையா – நான் 6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என் ஆலோசனைக் கர்த்தரே – என் அடைக்கலப் பட்டணமே

Nandri Bali Peedam Kattuvom | நன்றிப்பலிபீடம் கட்டுவோம் Lyrics | jebathotta jeyageethangal vol 16

நன்றிபலிபீடம் கட்டுவோம் நல்லதெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மைகள் ஆயிரங்கள் சொல்லி சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா 3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம் இயேசுவோடே கூட எழச்செய்தீர் கிருபையினாலே இரட்சித்தீரே உன்னதங்களிலே உட்காரச்செய்தீர் 4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே 5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

Naanum En Veetaarumovendral | நானும் என் வீட்டாருமோவென்றால் | Lyrics | jebathotta jeyageethangal vol 16

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா? 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாத தென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் யென்பதை இன்றே தீர்மானம் செய்வாய் 2. அடிமையான நம்மையுமே தேவாதி தேவன் மீட்டார் மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட கர்த்தரை சேவிப்பாயா? 3. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா? 4. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா? Tag:  jebathotta jeyageethangal vol 30, jebathotta jeyageethangal vol 31, jebathotta jeyageethangal vol 33, jebathotta jeyageethangal vol 34, jebathotta jeyageethangal vol 5, jebathotta jeyageethangal vol 35, jebathotta jeyageethangal vol 39, jebathotta jeyageethangal all songs, jebathotta jeyageethangal all volumes, jebathotta jeyageethangal anbu kooruven, jebathotta jeyageethangal audio, jebathotta jeyageethangal audio songs free download, jebathotta jeyageethangal all audio song download, jebatho

Kartharai Nambinor | கர்த்தரை நம்பினோர் | Lyrics | jebathotta jeyageethangal vol 16

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் 1. எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு கனிதரும் மரமாய் வளர்வார்கள் கோடை காலத்தில் பயமில்லை வறட்சி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 4. கர்த்தரை நேசித்து அவர் வழியில் நடக்கும் மனிதர் பேறுபெற்றோர் உழைப்பின் பயனை உண்பார்கள் நன்மையும் நலமும் பெறுவார்கள் Tag:  jebathotta jeyageethangal vol 30, jebathotta jeyageethangal vol 31, jebathotta jeyageethangal vol 33, jebathotta jeyageethangal vol 34, jebathotta jeyageethangal vol 5, jebathotta jeyageethangal vol 35, jebathotta jeyageethangal vol 39, jebathotta jeyageethangal all songs, jebathotta jeyageethangal all volumes, jebathotta jeyageethangal anbu kooruven, jebathotta jeyageethangal audio, jebathotta jeyageethangal audio songs

Appa Ummai Nesikkiren | அப்பா உம்மை நேசிக்கிறேன் | Lyrics | jebathotta jeyageethangal vol 16

அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே – ஐயா 2. பலியாகி என்னை மீட்டிரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா – ஐயா 7. ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும்

Andavar Padaitha | ஆண்டவர் படைத்த வெற்றியின் | Lyrics | jebathotta jeyageethangal vol 16

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் – 2 உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் – 2 தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும் எனது மீட்புமானார் – 2 நீதிமான்களின் சபைகளிலே வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல்லாயிற்று – 2 கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி 4. என்றுமுள்ளது உமது பேரன்பு என்று பறை சாற்றுவேன் – 2 துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன் துணையாய் வந்தீரய்யா – 2 – தோல்வி Tag:  jebathotta jeyageethangal vol 30, jebathotta jeyageethangal vol 31, jebathotta jeyageethangal vol 33, jebathotta jeyageethangal vol 34, jebathotta jeyageethangal vol 5, jebathotta jeyageethangal vol 35, jebathotta jeyageethangal vol 39, jebathotta jeyageethangal all son