ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் | Aandavar Alugai Seiginraar | Lyrics | jebathotta jeyageethangal 26

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே 
திருமுன் வாருங்கள்
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க 
கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க 
எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க
இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க
எக்காள தொனி முழங்க
இப்போது துதியுங்கள் 
வீணையுடன் யாழ் இசைத்து
வேந்தனை துதியுங்கள்
துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் உயர்த்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
ஓசையுள்ள கைத்தாளத்தோடு
நேசரை துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே,
இயேசுவை துதியுங்கள்
நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,
என்றென்றும் நம்பத்தக்கவர்
இயேசுவே நம் இரட்சகர்
என்று முழங்கிடுங்கள்
அவர் நமக்காய் ஜீவன் தந்தார்
அவரின் ஆடுகள் நாம் 
நடனத்தோடும் தழ்புரோடும்
நாதனைத் துதியுங்கள்
மத்தளத்தோடும் குழல் ஊதி
சப்தமாய்த் துதியுங்கள்

Comments

Popular posts from this blog

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து