Ummai Naadi Thedum Manithan | உம்மை நாடித் தேடும் | Lyrics | jebathotta jeyageethangal 26

உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2
துதியும் கனமும் தூயோனே உமக்கே
ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன் (2)
மறு வாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன் (2)
என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான் (2)
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான் (2)
உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு (2)
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு (2)
உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத்திருத்த வேண்டும் தேவா (2)
கருத்தோடு உமது வசனம்
கற்றுத்தந்து நடத்த வேண்டும் (2)

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து