Unnai Kaangiraar | உன்னைக் காண்கிறார் | Lyrics | jebathotta jeyageethangal 20

உன்னைக் காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் -உன்னை

1. நோய்நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார்

2. கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார்

3. எதிர்காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்

4. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள்

5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம்
நற்செய்தி முழங்குவோம்

Comments

Popular posts from this blog

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words