யாக்கோபே நீ வேரூன்றுவாய் | Yakobe Nee | Lyrics | jebathotta jeyageethangal vol 11

யாக்கோபே நீ வேரூன்றுவாய் | Yakobe Nee | Lyrics | jebathotta jeyageethangal vol 11
யாக்கோபே நீ வேரூன்றுவாய் | Yakobe Nee | Lyrics | jebathotta jeyageethangal vol 11
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த
என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்
1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

2. அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ – நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்

4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்

5. மேடுகளை பிளந்து ஆறுகள் தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்

6. நானே உங்கள் தேவன் நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்

Comments

Popular posts from this blog

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து